Sunday, December 9, 2012

உன்னை நினைத்து

உன்னை நினைத்து அழ கூட முடியவில்லை
  கண்ணர் சிந்த கூட என் கண்களுக்கு மனம் இல்லை
ஏன்  தெரியுமா
 என் கண்ணில் நிறைந்த உன்னை அழுதே கரைக்க
 என் கண்களுக்கு கூட விருப்பமில்லை

Saturday, March 24, 2012

தவம்

அன்பே  நான் உன்னை நினைத்து வாழும் வாழ்க்கை என்பது ஒரு தவம் அன்பே 
ஆனால் நீ இல்லாத வாழ்வு என்பது என் மரணம் அன்பே 

Monday, January 30, 2012

எத்தனை முறை

எத்தனை முறை
கொத்தினாலும் தீராத
கனி தான் காதல்.
கோடி மீன்கள் குடித்ததனால்
குறைவு படுமா கடல் ?
சில நேரங்களில்
பனிக்குள் பொதிந்து வைத்த
நீராய்,
இன்னும் சில நேரம்
நீருக்குள் பிரித்து வைத்த காற்றாய்
காதல்.
அது,
கிழமைகளின் கீழ்
கிழிந்து போவதில்லை.
இதயக் கோபுரங்களை
வெள்ளை விமானங்கள்
விழுங்கிடுமா என்ன ?
நீ,
அம்மனைத் தரிசிக்கும்
ராகு கால ரகசியம் முடிந்தபின்
நான் உன்னை
தவமிருந்து தரிசிக்கிறேன்.
நீ தான்,
விரதமிருக்கிறேன்
விலகிப் போ என்று
அவ்வப்போது
உன் செவ்வாய் கதவுகளைச்
சாத்தியே வைக்கிறாய்.
கர்ப்பக்கிரகம் திறந்த பின்னும்
கடவுளை யாரோ
திரையிட்டு மறைப்பதாய்
தோன்றுகிறது எனக்கு.
நல்ல வேளை,
நீ
மௌன விரதம் இருப்பதில்லை.
பூக்களுக்குள் வாசனை ஊற்றி
வண்டின் நாசிகளை
வடமிட்டுக் கட்டி இறக்கினால்
வலிக்காதா என்ன ?
மனசுக்கு.
எந்த ஆடை எனக்கழகு?
என
ஓர் பிரபஞ்சக் கேள்வி கேட்கிறாய்.
எந்தச் செடி
எனக்கழகென்று
பூக்கள் கேட்பது நியாயமா ?
எந்தப் பூ
எனக்கழகென்று
வண்ணத்துப் பூச்சி வினவலாமா ?
தொட்டாச்சிணுங்கியின்
தோழி நீ,
அனிச்ச மலரின்
பெண் அவதாரம் நீ,
விடையில்லையேல் வாடிவிடுவாய்.
காதுகளால் கேட்பது
காதலில் சுவையில்லை
உன்
உதடுகளைக் கடன் கொடு
முத்தத்தின் உலை தரும்
வெப்பத்தால் விளக்குகிறேன்.
உன்னை நேரில் பார்த்து
எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன
அதனால் என்ன
உன்னை நினைத்துப் பார்த்து
ஒரு நொடி கூட ஆகவில்லையே

Thursday, January 26, 2012

என் அன்பே கரைகிறேன் உன் நினைவிலே

மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிரே பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாருவாயோ வான் என்று உன்னை நினைத்தேன் வானவில்லாய் மறைந்தாயே திருக்குறளாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே கண் மூடினால் இருள் ஏது? நீயே தெரிகிறாய் நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய் எனக்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய் உன்னாலே நினைவுகளாலே மோதி விடுகின்றதே உயிராய் நீ இருந்தாய் கனவிலும் தெரிந்தாய் அன்பே உன் நினைவால் நடைபிணம் ஆகிறேன் கரை மோதும் அலைகளை போல நினைவுகள் மோதிடுதே ஊதுகின்ற சிகரெட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே தண்ணீரில் குமிழியை போல வந்து போனாயே விளையாடும் மைதானங்கள் மயானம் ஆகிடுதே இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே என் பள்ளியே முற்று புள்ளியே இனி முழுவதும் நான் அழுவதும் உன்னை நினைத்தே அன்பே நீ எங்கு போனாலும் உன் நினைவாய் அலைகிறேன் என் அன்பே உனக்காக கிடக்கிறேன் என் அன்பே கரைகிறேன் உன் நினைவிலே உன்னை இழக்கிறேன் என் அன்பே   !!

Saturday, October 1, 2011

சாவதை விட

அன்பே நீ சிரித்து பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும்
 இன்று
 நினைக்கையில் என்மனதில் முள்ளாய் குத்துகின்றது
 பிரிந்து செல்வாய் என முன்பே தெரிந்து இருந்தால்
அன்றே
 இறந்திருப்பேன்
 இன்று அணு அணுவாய் சாவதை விட