Saturday, April 2, 2011

ஆனந்தமாய்கூட

ஆனந்தமாய்கூட
என் கண்கள் உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த விரும்பவில்லை
கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும்
உன் காட்சியில் ஒன்றே ஒற்றை
அந்தக் கண்ணீர் கரைத்துவிட்டாலும்
பார்க்கும் சக்தியை இழந்துவிடாதா
என் கண்கள்
உன்னிடம் என் காதல் இல்லாவிட்டாலும்
 என்னுடன் இருக்கும் காதல்
என் உயிர் உள்ளவரை உன்னை தொடரும்

.உன் நினைவுகளுடன்

நிஜங்களையும் மறந்தேன்...
கனவில் மிதந்தேன்கனவில்
இருந்து மீண்டேன்....
இன்று நிஜங்களும் கனவாகி போனது
என்று
புரிந்து கொண்டேன்...
உன் நினைவுகளுடன் வாழ்கிறேன் 

உள்ளம் தேடு கிறது

விளையாட்டு 
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.

எத்தனை முறை இவ்வாறு  இருப்பேன்
உன் நினைவுளுடன் பார்ப்பவரை  எல்லாம்
உன்னை போலாவது இருக்க மாட்டலா என உள்ளம் தேடு கிறது
ஏன்னடி  இந்த நரக வேதனை  தந்தாய்