Sunday, February 13, 2011

என் மரண நிலை

என்னவளே
உன்னோடு மனம்விட்டுப்பேச
என் இதயம்
தினம் தினம் துடிப்பதேனோ

உன்னோடு நடை பழக
என் இரு பாதங்களும்
உனைத் தேடி வருவதேனோ

உனைப் பார்க்காமல்
என் இரு விழிகளும்
தூங்கும் போதும்
மூட மறுப்பதேனோ

உன்னைச் சேராமல்
என் இதயம் தினம் தினம்
கண்ணீர் மழை பொழிவதேனோ

என்னவளே
உனக்கு என்
மரண நிலை
புரியவில்லை ஏனோ

No comments:

Post a Comment